Image

பிரதோஷம் என்பது ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. (1) நித்ய பிரதோஷம், (2) பட்சப் பிரதோஷம், (3) மாச பிரதோஷம்,
(4) மஹா பிரதோஷம், (5) ப்ரளய பிரதோஷம்.

“பிரதோஷம்’ என்றால் அனைத்துக் குற்றங்களும் பாவங்களும் சிவபெருமானால் பொறுத்து மன்னிக்கக்கூடிய காலமாகும்.
ஜாதகத்தில் ஏதாவது குற்றங்கள் இருந்தால் திருமணத்தடை, புத்திரப்பேறின்மை, கடன் போன்ற கஷ்டங்கள் ஏற்படுகின்றன.
பிரதோஷ விரதம் இருந்தால், சிவன் ஜாதகக் குற்றங்களைப் போக்கி நன்மையளிப்பார். நாம் முற்பிறவிகளில் செய்த
பாவங்களினால் எத்தனையோ இன்னல்களுக்கு ஆளாகிறோம். பிரதோஷ விரதம், இவற்றிலிருந்தும் நம்மைக் காக்க வல்லது.

தினமும் மாலை சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு 24 நிமிடங்கள், பின்பு 24 நிமிடங்கள் ஆக 48 நிமிடங்கள் பிரதோஷ
காலமாகும். இது நித்ய ப்ரதோஷம். வளர்பிறை திரயோதசி திதி மாலைப் பொழுது பட்ச பிரதோஷமாகும். தேய்பிறைத்
திரயோதசி திதியின் மாலைப்பொழுது மாச பிரதோஷமாகும். சனிக்கிழமையன்று தேய்பிறைத் திரயோதசி திதி கூடிவருவது
தான் மஹா பிரதோஷம் என்று குறிப்பிடப்படுகிறன.. இதனை சனி மஹாபிரதோஷம் என்றும் கூறுவர். தேவர்கள்
பாற்கடலைக் கடைந்த பொழுது ஏற்பட்ட விஷத்தை சிவபெருமான் தாமே உட்கொண்டு உலகைக் காப்பாற்றிய நாள் இது.
மற்றைய பிரதோஷங்களில் உபவாசம் (சாப்பிடாமல் இருப்பது) இருக்க இயலாதவர்கள் சனி பிரதோஷத்தன்றாவது உபவாசம்
இருந்து சிவபெருமானை வழிபட்டால் எல்லா குற்றங்களும் பாவங்களும் நீங்கி சகல க்ஷேமங்களும் உண்டாகும்.

ஐந்தாவதாகிய பிரளய பிரதோஷம் என்பது இந்தக் கலியுகம் முடிந்து அனைத்து உலகங்களையும் சிவபெருமான் தம்மகத்தே
ஒடுக்கிக் கொள்வதாகும்.

வரும் பிப்-23, 2013
மார்ச்-9,
ஜூலை-20,
நவம்பர்-30,
டிசம்பர்-14, 2013

ஆகிய 5 நாட்களும் சனி பிரதோஷ நாட்களாகும். மாதத்திற்கு இரு நாட்கள் பிரதோஷம் வரும். இந்த ஆண்டு நவம்பர் மாதம்
1,15,30 ஆகிய மூன்று தேதிகளில் பிரதோஷம் வருவதால் மொத்தம் 25 பிரதோஷம் ஆகிறது.

ஓம் நமசிவாய! அரனை மறவேல்!

 

 

பிரதோஷ பூஜை ஸ்தோத்திரம்

1. ஓம் பவாய நம பகவானே என்னைக்காப்பாற்று

2. ஓம் ருத்ராய நம என் குற்றங்களைச் சிந்தனையிலிருந்து மறைய வேண்டுகிறேன்

3. ஓம் மிருடாய நம என் துன்பங்களைப்போக்கி சுகம் தரும்படி கேட்கிறேன்

4. ஓம் ஈசானாய நம நல்ல வழி, நற்புகழ் அடைவதற்கு வழிகாட்ட வேண்டுகிறேன்

5. ஓம் சம்பவே நம எனக்கு உயர்வு அடைய வழி காட்டுதல்6. ஓம் சர்வாய நம கொடியவர்களைத்தண்டிக்க தாங்கள் முன்வர வேண்டும்

7. ஓம் ஸ்தாணவே நம பகவான் சிறிதும் அசைவின்றி நிலை பெற்றிருப்பவர்

8. ஓம் உக்ராய நம ஆசை, பாசம், எதிலும் நிலையான ஆட்சி செய்பவர்

9. ஓம் பர்க்காய நம  பகவானின் சிறப்பான உருவம் தருமாறு கேட்டல்

10. ஓம் பரமேஸ்வராய நம பகவானுக்கு ஒரு ஒளிமயமான திருவுருவம் தோன்றுதல்

11. ஓம் மஹா தேவாய நம பகவானுக்கு ஒரு ஒளிமயமான திருவுருவம் தோன்றுதல்